கிழக்கை சகோதர முஸ்லீம் இனத்திடம் கையளித்த மாபெரும் பெருமை த. தே. கூ.விற்கு கிடைத்த வெற்றி – த.தே.ம.மு. மட்டு மாவட்ட இணைப்பாளர்  சுரேஷ்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனையுமின்றி ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாலே இன்று தமிழ் மக்கள் கிழக்கை இழந்து நிற்கின்றார்கள. எனவே இந்த கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும் ஏன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா புளியடி சந்தியில் மாமானிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (05) உணர்வு பூர்வமாக அனுஷ;டிக்கப்பட்டது இதில் கலந்துகொண்ட  மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
எங்களைப் பொறுத்த மட்டில் கருணாவும் ஒன்றுதான் பிள்ளையானும் ஒன்றுதான் டக்கிளஸ் தேவானந்தமும் ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றுதான் இவர்கள் எல்லாருமே துரோகிகள் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து கிழக்கு தமிழ் மக்களுடைய இருப்பையும் வாழ்வையும் பறிக்கின்ற குறுகிய கால சிந்தனையில் இருக்கின்றார்கள் எனவே இவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
முஸ்லீம் அரசியல் தலைமைகள் பேரம்பேசும் அரசியலை செய்திருக்கின்றனர். எனவே ஜனாதிபதி மைத்திரியுடன் ஹிஸ்புல்லா இருப்பது கிழக்கு மாகாணத்தை தருகின்றேன் அடிப்படையிலே தான் ஹிஸ்புல்லா ஆளுநராக வந்திருக்கின்றார். இது தான் பேரம் பேசுதல்
2009 இற்கு பின் தமிழ் மக்களின் அரசியல் என்பது வெறும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இருந்தபோதும் தமிழ் மக்களின்  பாதுகாப்பு கவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் என நம்பியிருந்தனர் ஆனால் அவர்களுடைய பாதை திசைமாறி போய்க் கொண்டிருக்கின்றது
நாங்கள் ஆயுதரீதியா ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்  மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் உரிமைவேண்டும் என குரல் கொடுத்து வந்தோம் ஆனால் இன்று திட்டமிட்டபடி இன்று கிழக்கு மாகாணம்; சகோதர முஸ்லீம் இனத்திற்கு திட்டமிட்டு தாரைவார்கப்பட்டுள்ளது.
இருக்கின்ற  தமிழ் மக்களின் நிலங்கள். வளங்;களை காப்பது என்பது ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு  அரங’கத்துடன் நல்லினக்கமாக இருந்தால் எல்லாவற்றையும் பெறலாம் என்ற ரீதியில் 8 வருடங்களாக கூறிவருகின்றனர்
இந்த நல்லிணக்கமும் இணக்க அரசியலும் இன்று கிழக்கு மாகாணத்தை தமிழரின் தாயக தேசத்தில் இருந்து சகோதர முஸ்லீம் இனத்திடம் கையளித்த மாபெரும் வெற்றியை இந்த கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைபு;பு செய்திருக்கின்றது  இது தான் அவர்கள் செய்த நல்லிணக்கம்
கடந்த காலத்தில் முஸ்லீம்   முதலமைச்சராக இருந்தவரால் இந்த மாவட்டத்திலே  அநியாயங்கள் நடந்துள்ள நிலையில் எமது மக்களுக்கு அடுத்தாக நடந்த இடி இந்த ஆளுனர் நியமிப்பு. எங்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை வடக்கு கிழக்கல் தமிழர்களுக்கு இருக்கின்ற உரிமை முஸ்லீம் மக்களுக்கும் இருக்கின்றது.
இருந்தபோதும் இந்த ஆளுநர் நியமிப்பு தமிழ் மக்களுக்கு மாறாக இடம்பெற்றிருக்கின்றது இதற்கு பெறுப்புக் கூறவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய மாமனிதர்கள் எல்லோரும் மாறி மாறி வந்த அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வரலாறுகளை மக்கள் நன்கு அறியவேண்டும்
மனித உரிமைகள் மற்றும் துறைகளில் சட்டத்தரணியான அவர் மட்டக்களப்பு மாவட்டத்திலே கைது செய்யப்பட் பல கைதிகள் தொடர்பாகவும் நீதிமன்றில் இலவசமாக வழக்காடி விடுவித்தவர் அதுமாத்திரமின்றி இங்கு இடம்பெற்ற இன படுகொலைகளை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர். மட்டுமன்றி  கொக்கட்டிச்சோலை படுகொலை தொடர்பாக வழக்காடியவர் அதனால் சந்திரிக்கா அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ் மக்களை பாதுகாக்கப்படவேண்டும் என்றால் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் மக்களுடைய சுதந்திரமான வாழ்வுக்கு அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்கவேண்டும். அதேவேளை  எங்களுடைய நலன் சார்ந்து பேசவேண்டும்;. ஏன்றார்