கிழக்கு மாகாண ஆளுநருக்கு Dr.சுகுணன்

#வாழ்த்துகள் #கௌரவ #ஆளுனரே
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்றைய தினம் அரசியலமைப்பிற்கு உட்பட்டு நியமிக்கப்பட்ட ஆளுனரே உங்கள் பணி சிறந்து கிழக்கு மாகாண மூவின மக்களும் மகிழ்வாக உங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை உருவாக்க மனசுத்தியுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.
எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தில் சுக்குநூறாக போயுள்ள இலங்கை சுதந்திரக் கட்சியின் வாக்கு பலத்தை உங்களால்தான் கட்டியெழுப்ப முடியும் என்ற அதீத, நடமுறைக்கு சற்று #கடினமான #குறிக்கோளை #ஜனாதிபதி #தந்துள்ளார்.
இந்த விதத்தில் நீங்கள் கட்சி அடிப்படையில் பார்த்தால் ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ரிசார்ட்டின் ACMC, த.தே. கூட்டமைப்பு ஆகிய மூன்றையும் உடைத்து சுதந்திரக்கட்சியை முன்னிறுத்தி மக்களின் வாக்குகளை மகிந்த ராஜபக்ச கூட்டணியான மொட்டு சின்னத்திற்கு இறுதியில் கொண்டு சேர்க்க வேண்டும். கேட்கவே இப்பவே வேர்க்கவில்லையா? ஆனால் உங்களால் முடியும்.
#எப்படி #என்று #பார்ப்போம்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
1. உங்களது ஊரையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் பிரதேசங்களையும் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் வாக்கு பலத்தை நீங்கள் பலதடவை காட்டி விட்டீர்கள்.
2. ஏனைய பிரதேச முஸ்லிம்களை SLMC, ACMC கவர வேண்டும்.
3. தமிழர்களை கவர வேண்டும் .
4. சிங்களவர்களை கவர வேண்டும்.

SLMC, ACMC சார் முஸ்லிம்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது உங்களது எதிர்கால அரசியல் இருப்பிற்கும் சாதகமாய் அமைவதால் நீங்கள் இலாவகமாக கையாளுவீர்கள்.
ஆனால் தமிழர்களும் கிழக்கு சிங்களவர்களும் உங்களை வேறு கோணத்தில் பார்ப்பதாலும் கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த பல நடவடிக்கைகள் உங்களுடைய விம்பத்தை ஆழமாக விதைத்திருப்பதாலும் நீங்கள் அதை தீர்க்க நீண்ட வேலைத்திட்டத்தில் இறங்க வேண்டும்.
இறைவன் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை கிழக்கு மாகாணத்தில் உங்களுக்கு தந்துள்ளான்.
மிகவும் அருமையாக மிக நீண்டகால நோக்கங் கொண்டதாகவும் இன, மத, பிரதேச நல்லுறவை வளர்த்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியில் முன்னெடுத்து செல்வதாகவும் செயற்படுங்கள்.
இறுதியாக சொல்லவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் வெற்றிக்குரிய வழியும்
“#அபிவிருத்தியையும் #நியமனங்களையும் #செய்யும்வேளை #விகிதாசாரத்தையும் #திறமையையும் #உண்மையான #தேவையையும் #மட்டுமே #பாருங்கள். #இனத்தையோ, #மதத்தையோ, #பிரதேசத்தையோ #பார்க்காதீர்கள். ”
கிழக்கு மாகாண வெற்றிபெற்ற ஆளுனராக ஜொலிக்க மூவின, மூமாவட்ட, மும்மத மக்கள் சார்பான வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.
Dr. குணசிங்கம் சுகுணன்
வைத்திய அத்தியட்சகர்
ஆதார வைத்தியசாலை
களுவாஞ்சிகுடி