காதலை ஏற்க மறுத்தமாணவி கழுத்தை அறுத்த பல்கலைக்கழக மாணவன் .மட்டக்களப்பில் சம்பவம்

 தனது காதலை ஏற்க மறுத்த பாடசாலை மாணவியின் கழுத்தை வீதியில் வைத்து அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  குறுமன்வெளியில் இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்கு உள்ளான  மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்வத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர் தலை மறைவாகியுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தியடைந்து பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர் ஒருவரே உயர்தரம் கற்று வரும் குறித்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததாக சம்பவம் தொடர்பில் தெரியவருகின்றது
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
குறித்த பல்கலை கழக மாணவன் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை காதலித்து வந்துள்ள நிலையில் இதனை மாணவி ஏற்க மறுத்துள்ளார.; இதனால் விரக்தியடைந்த மாணவன் பாடசாலை ஆரம்பமாகிய 02.01.2019 புதன் கிழமை பாடசாலை விட்டு மாணவி வீடு திரும்பும்போது   நண்பர் ஒருவருடன் துவிச்சக்க ரவண்டியில் சென்ற மாணவன் திடிரெ குறித்த மாணவியை வீதியில் வைத்து மறித்து கூரிய ஆயுதம் ஒன்றினால் மாணவியின் கழுத்தை கதறகதற  அறுத்துள்ளார்.
கடும் பிராயத்தனத்தினை மேற்கொண்ட மாணவி குறித்த கொலை முயற்சியில்  இருந்து உயிர் தப்பி  கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தனது உறவினர்களின் துணையுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை நிபுணரின் பிரயத்தனத்தினால் உயிர் பிளைத்து அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனின் நண்பன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன்  சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்…..பழுகாமம் நிருபர்.