திருமலையில் மான்களுக்கு உணவகமும்,உறைவிடமும்

பொன் ஆனந்தம் 

திருகோணமலை    என்றுசொல்லும்போது அங்கிருக்கும்மான்கள்தான் ஞாபகத்திற்கு வரும் . இவை அன்றாடம் உணவுக்காக அலைந்துதிரிந்து பொலித்தின் களை உண்டுஇறந்து போகும்   சம்பவங்கள் அடிக்கடிநடைபெற்றதால் திருகோணமலைரோட்டரி கழகம் அவற்றுக்குரிய உணவகம் உறைவிடம் ஒன்றை அமைப்பதட்குகடந்த சில வருடங்களாக முயன்று வந்தது 

ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த  விக்கிமற்றும் அவரின் மனைவி கரேன்அவர்களும் உதவுதட்கு முன் வந்தார்கள் திருகோணமலைநகர சபையின் உதவியுடன்  முக்கியமாகநகர சபை தலைவர் இராசநாயகம்அவர்களின் பங்களிப்புடன்மான்களுக்கான    உணவகம்  உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது   

இவ் அழகிய  மான்களுக்கு  உணவு மற்றும்தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டில்ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நீர் கிடைக்கக்கூடிய தாக     நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது .  மான்களுக்கானஉணவு மரக்கறி சந்தையில் இருந்துதுப்பரவு செய்யப் பட்டு புதிதாக அமைக்கப்படட  சீமெந்து தரையில் இடப்படுகிறது