மட்டு. மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளருக்கு லக் ரெகியா ஹரசர விருது

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அனுசரணையுடன் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட லக் ரெகியா ஹரசர “Excellent Performance” 2018 விருது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி பி.தெய்வேந்திரகுமாரிக்குக்கிடைத்துள்ளது.
இவருக்கு இவ்விருது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையை வழங்கியதற்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லையிலுள்ள கக்குருபாய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.