மண்முனை தென்மேற்கு பிரதேச அரச அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பித்து வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரச திணைக்களங்களின் புதிய ஆண்டிற்கான சேவைகள் நேற்று(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அலுவலகங்களில் தேசியகொடியேற்றப்பட்டு, அரச ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தமது சேவைகளை ஆரம்பித்தனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் சேவை ஆரம்பிப்பின் போது, கற்றலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்து தமது சேவைகளை ஆரம்பித்தனர்.