மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இரு திணைக்களங்களுக்கு உற்பத்தி திறனில் 3ம்இடத்திற்கான விருது

இலங்கை தேசிய உற்பத்தி திறன் செயலகம் நடாத்திய 2018ம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் போட்டியில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் 3ம் இடத்திற்கான விருதினை பெற்றுள்ளதுடன், அதே பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையும் 3ம் இடத்திற்கான விருதினை வெற்றிபெற்றுள்ளது.

குறித்த, பிரதேச செயலகமானது 2016ம் ஆண்டில் இடம்பெற்ற உற்பத்தி திறன் போட்டியில் பாராட்டினை பெற்றிருந்தது. அதேபோன்று மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை 2015ம் ஆண்டு 3ம் இடத்தினைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.