புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விவேகானந்த வித்தியாலயம் மற்றும் சாரதா வித்தியாலயத்தில் கல்வி பயின்று, 2018ல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இன்று(01) செவ்வாய்க்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ம.குகநாதன் அவர்களினால், குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், மற்றும் கோட்ட அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 80மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.