மட்டக்களப்பு கல்விவலயத்துக்கு வரலாற்றுப்பாடத்துக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் நியமனம்

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வரலாற்று  பாடத்திற்கான உதவிக்கல்வி பணிப்பாளராக கமலநாதன் ரகுகரன் அவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டு நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொணடார்.

கல்வி நிருவாக சேவை தரம் 3 ஐ சேர்ந்த இவர் அம்பாரை கல்வி வலயத்தில் உதவிக்கல்வி மணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பழுகாமத்தினை பிறப்பிடமாக  கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வி தொடக்கம்   உயர்தரக்கல்விவரை   பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் பயின்று உயர் தரத்தில் சித்தியெய்து தேசிய கல்வி கல்வியல் கல்லூரிக்கு தெரிவாகி அதேபாடசாலையில் ஆசிரியாரக நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு ஆசியராக கடமையாற்றி வந்த நிலையில் அதிபர் சேவை போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அதே பாடசாலையில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டு, கடமையாற்றி வந்த நிலையில் கல்வி நிருவாக சேவை போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அம்பாரை கல்வி வலயத்தில் கடமையாற்றி வந்த நிலையிலையே தற்போது மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உதவிக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..