மட்டக்களப்பு கருவேப்பங்கேணிப்பகுதியில் வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பல வீதிகள் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக செப்பனிடப்பட்டு வருகின்றன.

இதன்படி இன்று (31.12.2018) கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதி மற்றும் சிவ நாகதம்பிரான் ஆலய வீதிகளுக்கான பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். கிட்டத்தட்ட 4.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படிப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநகர முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜா, தொழிநுட்ப உத்தியோகத்தர் ச.ராஜகுமார், முனைப்பு தொண்டு நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், மாநகர சமுக சுகாதார உத்தியோகத்தர் சந்திரகுமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.