வடமாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கான நிவாரணப்பணி நேற்று (30) இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. பிரதீபன் அவர்களிடம் நிவாரணப்பொதிகளை கையளித்ததுடன் அவர்களின் சிபார்சுக்கமைய தேராவில், வள்ளிபுனம், தேவிபுரம், மண்ணாகண்டல் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு அக்கிராம உத்தியோகத்தர்களின் முன்னிலையில் ரூபா 1500 பெறுமதியான 1150 உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு இருந்து சென்ற இளைஞர்களால் கையளிக்கப்பட்டது.
இவ் உதவியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் படுவான்கரை பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட “நாம் பழுகாமம்”, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு “உதவும் உறவுகள்”, கொக்கட்டிச்சோலை “மக்கள் நல இளைஞர் மன்றம்”, முனைக்காடு “கடல் கடந்த முனையின் கரங்கள்”, கொல்லநுலை “கடல் கடந்த நுலை முனை கரங்கள்”, முதலைக்குடா ” சமூக மேம்பாட்டு அபிவிருத்தி ஒன்றியம்”, வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு “அக்கினி சிறகுகள்” என்பன இணைந்து இவ் அறப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.