மகிழடித்தீவு வைத்தியசாலையில் வருடாந்தம் 40 – 50ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

மகிழடித்தீவு பிரதேசவைத்தியசாலையில் வருடத்திற்கு 40 – 50 ஆயிரம் வெளிநோயாளர்களும், 8 – 10 ஆயிரம் உள்ளக நோயாளர்களும் வைத்திய சேவையினைப் பெறுவதோடு ஏறக்குறைய 6000ற்கும் மேற்பட்ட தோற்றா நோய், நோயாளர்களும் கிளினிக் சிகிச்சையைப் பெறுவதாக மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி தி.தவனேசன் தெரிவித்தார்.

மகிழத்தீவு வைத்தியசாலையின் செயல்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே இதனைக்குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் வைத்திய அதிகாரி அங்கு உரையாற்றுகையில்,

1962ம் ஆண்டு ஒரு ஆரம்ப பராமரிப்பு நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2012ம் ஆண்டு வரை சேவை வழங்களில் ஒரு உறங்கு நிலையிலையே காணப்பட்டது. ஆனால் இந்த வைத்தியசாலையின் தேவைப்பாடு மிகவும் அத்தியாவசியமானதாக உணரப்பட்டதனால் இந்த வைத்தியசாலையை முன் நோக்கி நகர்த்தும் செயற்பாடுகள் வைத்தியசாலையின் நிர்வாகத்தினாலும், ஊழியர்களினாலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனைகளின் உறுதியான பக்கபலத்தோடு முன்னெடுக்கப்பட தொடங்கியது. 2013இல் வெளிநோயாளர் பிரிவு மட்டும் இயங்கி வந்த இந்த வைத்தியசாலை இன்று ஓரளவிற்கு சகலவிதமான வைத்திய சேவைகளையம் வழங்கக் கூடிய ஒரு நிறுவனமாக வளர்ந்து நிக்கின்றது. இதனொரு வெளிப்பாடாக மகிழடித்தீவு வைத்தியசாலை 2015ம் ஆண்டு தேசிய உற்பத்திதிறன் விருதுகளில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினையம் கிழக்கு மாகாண அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் சிறந்த நிறவனத்திற்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டது. இவ்வாறான வளர்ச்சிப் பாதையில் பயணித்த இந்த வைத்தியசாலை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட சவால்களையும், நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களையும் சந்தித்திருந்தது. இவைகள் யாவும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் என உணரப்பட்டதனால் எனது ஊழியர்கள், பிரதேச மக்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனை உதவியோடு இந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

போக்குவரத்து வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற, பொருளாதார நிலையிலே வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற, ஏறக்குறைய 45000இற்கும் மேற்பட்ட மக்களுக்கு வைத்தியசேவையினை வழங்குகின்ற வைத்தியசாலையாக மகிழடித்தீவு உள்ளது. இந்த வைத்தியசாலையில் வருடத்திற்கு 40 – 50 ஆயிரம் வெளிநோயாளர்களும், 8 – 10 ஆயிரம் உள்ளக நோயாளர்களும் வைத்திய சேவையினைப் பெறுவதோடு ஏறக்குறைய 6000ற்கும் மேற்பட்ட தோற்றா நோய், நோயாளர்களும் கிளினிக் சிகிச்சையைப் பெறுகின்றனர். இவ்வாறு இயங்குகின்ற இவ் வைத்தியசாலை ஓரளவிற்கு சகல வசதிகளினுடனும் கூடிய வைத்திய பராமரிப்பை வழங்கக் கூடிய ஒரு வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த சமரசங்களும் இல்லை. இந்த வைத்தியசாலையின் வளர்;ச்சியில் மிகவும் தேவைப்பாடான, பௌதிகவளப் பற்றாக்குறை 2015ம் ஆண்டின் அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் னுச. மஹிபால அவர்களின்; நேரடியான விஜயத்தின்போது உணரப்பட்டதனால் நோயாளர்; விடுதி அமைப்பதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் அதற்கான நிதி தற்போதைய பிரதி சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டு அதற்கான கட்டுமான வேலைகள் நிறைவுறும் நிலையை அடைந்திருக்கின்றது. எனவே இந்த விடுதியானது நோயாளர்கள் எதிர்நோக்கும் இடப்பற்றாக் குறையினை ஓரளவு நிவர்த்தி செய்யும் என எதிர்பார்கின்றோம்.

வருகின்ற எதிர்காலம் இந்த வைத்தியசாலைக்கு மிகவும் ஒரு சவாலான காலப்பகுதியாக இருக்கும் என்பதனை கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் எதிர்வு கூறி நிற்கின்றது. எனவே எதிர்காலத்தில் வருகின்ற பாரிய சவால்களையம், அழுத்தங்களையம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு இந்த வைத்தியசாலையின் நிருவாகமும் ஊழியர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எது எவ்வாறாக இருந்த போதும் எவ்வாறான சவால்களையும் அழுத்தங்களையும் எமது ஊழியர்களின் மன உறுதிகளோடும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் இப்பிரதேச மக்களது ஒத்துழைப்போடு எவ்வாறான சவால்களையும், அழுத்தங்களையும் வெற்றிகரமானதாக எதிர்கொண்டு இந்த வைத்தியசாலையினை சிறந்த வைத்தியசேவையினை வழங்கும் நிறுவனமாக உயர்த்துவதற்கு நாங்கள் அனைவரும் திடசங்கர்ப்பம் பூணவேண்டும். என்றார்.