கிளிநொச்சியில் கிணற்றுக்குள் இறங்கிய அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் திடீரென ஏற்பபட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று(30) களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்வாதார அபிவிருத்தி வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பாலித தேவப்பெரும குழுவினர் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் கிணறுகளை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

சாதாரண மீட்பு குழு போன்று அமைச்சர் என்ற பெருமையை மறந்து கிணற்றில் இருந்து நீரை இறைத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.