மகிழடித்தீவு வைத்தியசாலையில் செயல்திறன் விருதுகள் வழங்கி வைப்பு

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை செயல்திறன் விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வைத்தியசாலையில், தமது சேவைக்குட்பட்ட பகுதியில் சிறந்த சேவையை ஆற்றிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு, அவர்களின் செயல்திறனை பாராட்டி இவ்விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி தி.தவனேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் மாகாணச்செயலாளர் எம்.அன்சார், மற்றும் சுகாதாரசேவையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வைத்தியசாலையுடன் இணைந்து சிறந்த சேவைகளை ஆற்றிய பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறுகிய காலப்பகுதிக்குள் சிறந்த வளர்ச்சியினைப் பெற்றிருக்கின்ற இவ்வைத்தியசாலையின் உயர்வுக்கு உழைத்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உள்ளிட்ட, ஊழியர்கள், மாவட்ட, மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும், சமுகத்தினர் இதன்போது நன்றியினையும் தெரிவித்தனர்.