நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவன் மாவட்டத்தில் 3ம் நிலை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் கலைபிரிவில் மாவட்டத்தில் 3ம் நிலையினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பி.சிவோஜன் என்ற மாணவன் கலைப்பிரிவில் 3ஏதர சித்தியினைப்பெற்று 3வது மாவட்ட நிலையினையும், வணிகப்பிரிவில் ஐ.தர்மலோஜினி என்ற மாணவி 3ஏ தர சித்திகளைப்பெற்று 21ம் மாவட்டநிலையையும், பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறாகவும் இப்பெறுபேறுவுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.