அம்பாறை, பொலன்னறுவை மாவட்ட செய்கையாளர்களுக்கு விதைநெல்

கடந்த பெரும்போகத்தில் நெற்செய்கையில் பாதிக்கப்பட்ட அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்ட செய்கையாளர்களுக்கு இலவசமாக விதைநெல் வழங்க தேசிய உணவு விரிவாக்கல்சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக விவசாய அமைச்சினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, அதற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

கடந்த பெரும்போகத்தில் நோய்த்தொற்று காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக தேசிய உணவு விரிவாக்கல்சபை தெரிவித்துள்ளது.