பகிடிவதையால் தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார்.அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர். மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சை கிளிநொஞ்சி வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.