மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காது

எதிர்கட்சி தலைவர் பதவி விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்பார்ப்பதைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் றோஹண லக்ஷ்மன் பியதாச எதிர்கட்சி தலைவர் பிரச்சினைக்கான தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி அலுவலகம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வினவிய போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட சுமார் 54 சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அண்மையில் பொதுஜன பெரமுன அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும், எனவே பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு எவ்வாறு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.