பாண்டிருப்பு கடலில் மலர் தூவி அஞ்சலி

செ.துஜியந்தன்
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூர்ந்து பாண்டிருப்புக் கடலில் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பாண்டிருப்பு அகரம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  நினைவஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சிவஸ்ரீ விமலேஸ்வர சர்மாவின் விசேட ஆத்மசாந்தி வழிபாட்டுடன் கடலில் உறவினர்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 இதேவேளையில் கல்முனை தமிழப்பிரிவு பிரதேசம் எங்கும் ஒப்பாரிச்சத்தத்தினால் சோகமயமாக காட்சியளித்தது
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை நினைவாக கல்முனை பிரதேச மக்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை ஆகிய தமிழ்க் கிராமங்களில் மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கல்முனை சவக்காலை வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பு ஒன்று கூடிய உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று பாண்டிருப்பு கடலில் உறவுகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன்  சவக்காலை வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பும் மக்கள் ஒன்று கூடி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பெரியநீலாவணையில் மக்கள் குடியிருக்கும் சுனாமி தொடர்மாடிக் குடியிருப்பிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இம் மக்களின் ஒப்பாரிச்சத்தத்தினால் கல்முனை கரையோரப் பிரதேசம் எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. இங்குள்ள இந்து ஆலயங்கள் பலவற்றில் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளும்இ அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றன.