மட்டக்களப்பு பொதுச்சந்தை வளாகத்தில் சுனாமி நினைவேந்தல்

சுனாமி நினைவேந்தல்.

2004.12.26ம் திகதி ஏற்பட்ட ஆழிரேலையினால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகவும் உடைமைகளை இழந்தவர்களுக்காகவும் இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சந்தை வளாகத்தில் சந்தை வியாபாரிகளினால் இந்த துயர் நிகழ்வு நினைவுகூரப்பட்டது.

மாநகர சந்தை வியாபாரிகள் சங்கத்; தலைவர் திரு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உதவி செயலாளர் திரு.வைரமுத்து அவர்களின் சிறிய உரையுடன் ஆரம்பமாகியது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது இறந்த, பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூர்ந்ததோடு, அண்மையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இறந்த உயிர்களுக்காகவும், கடந்த வாரம் வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் துயருற்றவர்களுக்குமாக திரு.வைரமுத்து அவர்களால் பிராத்தனை செய்யப்பட்டது.

காலை 09.25 மணிமுதல் 09.37 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி சந்தை வியாபாரிகளினால் நிகழ்த்தப்பட்டது.

தகவல்: க.சூரியகுமாரன், வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.