2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தினங்கள்

அடுத்து வரும் 2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய தினங்கள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம்  சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.

 

அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் வங்கிகளுக்குமான குறித்த அறிவித்தலின் படி 2019ஆம் ஆண்டில்,

ஜனவரி – 10, பெப்ரவரி – 08, மார்ச் – 08, ஏப்ரில் – 08. மே – 10, ஜுன் – 10, ஜுலை – 10, ஓகஸ்ட் – 09, செப்ரெம்பெர் – 10,  ஒக்டோபர் – 04, நவம்பர் – 08, டிசெம்பர் – 10 ஆகிய தினங்களில் ஓய்வூதியத்ததைப் பெற்றுக் கொள்ளலாம் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி டயஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிருபத்தின் பிரதிகள்  ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலாளர், பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கணக்காய்வாளர் நாயகம், அரச கணக்குகள் பணிப்பாளர் நாயகம், தபால் மா அதிபர், அனைத்து வங்கிகளினதும் தவிசாளர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.