கோரத்தாண்டவம் இடம்பெற்று 14வருடங்கள்

இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் நாளை (26), இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இதன்படி நாளை காலை 09.25 தொடக்கம் 09.27 வரை,  இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்தும்படி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.