துறைநீலாவணையில் மருதமுனை இளைஞர்கள் செய்த செயல்

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் தெருவிளக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு மருதமுனையைச் சேர்ந்த இளைஞர் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதானவீதியில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கை பட்டப்பகலில் துவிச்சக்க வண்டியில் வந்த சில இளைஞர்கள் வீதியில் கட்டியெடுத்து எறிந்து சேதப்படுத்தியுள்ளார்கள்.இதனால் பிரதானவீதியில் உள்ள 3 தெருவிளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதப்படுத்திய இளைஞர்களை வீதியில் பயணித்த பொதுமக்கள்,ஆட்டோச்சாரதிகள் நேரில் கண்டுள்ளனர்.இவர்களை அடையாளப்படுத்த விரைந்த பொதுமக்களை ஏமாற்றிட்டு மருதமுனை கிராமத்திற்கு ஓடியுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவரின் முயற்ச்சியால் தேசிய சகவாழ்வு அரச கருமமொழிகள் நல்லிணக்கம் அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு  களுதாவளை பிரதேச சபையால் இவ்வருட ஆரம்பப்பகுதியில் தெருவிளக்கு பொருத்தப்பட்டதாகும்.துறைநீலாவணை கிராம பொதுமக்களின் நன்மைக்காக பொருத்தப்பட்ட தெருவிளக்கை சேதப்படுத்தியது சம்பந்தமாக மருதமுனை கிராமத்தில் உள்ள பள்ளி வாசல் தலைவர்,ஊடகவியலாளர்கள்,புத்திஜீவிகள் இவ்விடயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைநீலாவணை பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.