(க. விஜயரெத்தினம்,எஸ்.நடனசபேசன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை(25.12.2018) 02.00 மணியளவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எஸ்.சேயோன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.இதன்பின்பு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கனகசபை,பா.அரியநேந்திரன்,பாரா