தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் கம்ரலிய வேலைத் திட்டத்தின் மூலம் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வேலைத் திட்டங்களுக்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 240 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களாக வீதி புரமைப்புக்கு 120 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், பாடசாலைகளின் மலசல கூடங்கள் அமைக்க 20 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் சந்திவெளி வைத்தியசாலை முன் வீதி, கோரகல்லிமடு முருகன் கோவில் முதலாம் குறுக்கு, கிரான் கிழக்கு விஸ்னு கோவில் வீதி, முள்ளிவெட்டுவான் வீதி, புணாணை மேற்கு மயிலந்தனை வீதி, வடமுனை ஊத்துசேனை பிரதான வீதி ஆகிய வீதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திகிலிவெட்டை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயம், கிரான் மேற்கு நாககன்னி ஆலயம், பாலையடித்தோனா ஸ்ரீ முருகன் ஆலயம், தேவாபுரம் ஸ்ரீ விநாயகர் ஆலயம் , புலிபாய்ந்தகல் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சின்ன வெம்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், குடும்பிமலை மலை முருகன் ஆலயம், மயிலந்தனை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், வாகனேரி ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயம், பூலாக்காடு ஸ்ரீ பெரியமுத்து மாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வாகனேரி கோகுலம் வித்தியாலயம் பறங்கியாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முறக்கொட்டான்சேனை ஆர்.கே.எம். வித்தியாலயம், முறுக்கந்தீவு சிவசக்தி வித்தியாலயம், புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலை மைதான புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு முறுத்தானை ஸ்ரீ முருகன் வித்தியாலயம், பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயம் என்பவற்றுகப்கு மலசலகூடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் கம்ரலிய வேலைத் திட்ட அபிவிருத்தி வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.