மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்துமாறும் இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.