மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்

 

களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த வயல் பிரதேசத்தில் நேற்று மாலை பழுதடைந்த மோட்டார் குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இதனை செயலிழப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.