போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்திற்குள் உட்புகுந்த யானை மூன்று வீடுகளை உடைத்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிராம வாசிகள் தெரிவித்தனர்.
திக்கோடை கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத்தில் அமைந்துள்ள மூன்று வீடுகளே குறித்த யானை தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்பபடுத்தப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
மேற்படி கிராமத்தில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதினை அறிந்த கிரமாவாசிகள் பாதுகாப்பு கருதி இரவு வேளையில் உறவினர்களின் வீடுகளில் தங்கிவருவது வழமையாகவுள்ளது.
அதன் பிரகாரம் வீட்டில் யாருமற்ற நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த யானை கூட்டம் வளவில் இருந்த மரங்களையும் மேற்படி வீடுகளையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் தங்களுக்கு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பினை பெற்றுத்தரவேண்டியது அதிகாரிகளின் கடமையெனவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானை தாக்குதலால் வீட்டின் சுவர்கள் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த கணினி உட்பட பல மின்பாவனை பொருட்களும் சேதத்திற்கள்ளகியுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பிலும் சேதவிபரம் சம்பந்தமாகவும் பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளதாக குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் தி.தியதீஸ்வரன் தெரிவித்தார்