அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் பிரதான அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அதிதியாகக் கலந்து நினைவுப் பேருரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.