கிராம சக்தி உட்கட்டுமான வேலைத்திட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிலும் இன்று(20) வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கடுக்காமுனை, குளுவினமடு, தாந்தாமலை ஆகிய இடங்களில் மொத்தம் மூன்றுவேலைத்திட்டங்கள்; ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கடுக்காமுனையில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையிலும், குளுவினமடுவில் மண்முனை தென்மேற்கு பிரதேச கணக்காளர் தலைமையிலும், தாந்தாமலையில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் தலைமையிலும் நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.