(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவையும், மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா எதிர்வரும் 22(சனி) 23(ஞாயிறு) ஆகிய தினங்களில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரியில், மட்டக்களப்பு மாவட்ட அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய மா.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை காலை பண்பாட்டு பவனியுடன் ஆரம்பிக்கும் இந்நிகழ்வு, காலை 9மணியிலிருந்து மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது. இருநாட்களும் நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ள குறித்தநிகழ்வில், புத்தகம், பாரம்பரிய பொருட்களின் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், உள்ளுர் கலைஞர்களின் நிபுணத்துவ பகிர்வு, உரையாடல், புலிக்கூத்து, நாடக அரங்கேற்றம், ஆய்வரங்கு, பல்கலாசார நிகழ்வு போன்றனவும் நடைபெறவுள்ளன. மேலும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறவுள்ளன.