வறுமையைத் தணிப்பதற்கும் குறைப்பதற்கும் அவைரும் முயற்சிக்க வேண்டும். – அரசாங்க அதிபர

இலங்கையின் வறுமைச் சுட்டி 4.1 வீதமாக இருக்கின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை 11.3 வீதமாக இருக்கின்றது. வறுமையில் மிகவும் கஸ்ரப்படுகின்ற பிரதேசமாக இருக்கின்ற நிலையை மாற்றியமைக்க சமுர்த்தித்திட்டத்தின் ஊடாக முடியும். அதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். வறுமைத்தணிப்புக்காகச் செயற்படவும் வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

சமுர்த்தி சௌபாக்கியா சந்தைப்படுத்தல் கண்காட்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பழைய கல்லடிப பாலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்ததி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா நடைபெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

வரலாற்றுச்சிறப்பு மிக்க எங்களுடைய பழைய கல்லடிப்பாலத்தில் இக் கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது நாட்டில் அரசாங்கம் பல்வேறு வகையான வறுமை ஒழிப்புத்திட்டங்களை காலத்தக்குக்காலம் அவற்றினுடைய செயற்பாடுகளையும், முன்னேற்றங்கழைளயும் அறிந்திருப்பீர்கள். 1956ஆம் ஆண்டுக்குப்பிற்பட்ட காலங்களில் பல்வேறு வகையான வறுமை தணிப்புத்திட்டங்களை கொண்டுவந்தாலும் நடைமுறைகளில் ஏற்பட்ட சில சிக்கல் காரணமாக இன்றும் நாங்கள் வறுமையைத் தணிப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதனை அறிவீர்கள்.

உண்மையில் 1956ஆம் ஆண்டு காணி உத்தரவுப் பத்திரங்களை பொது மக்களுக்கு வழங்குவதன் ஊடாக அவர்களுடைய வருமானத்தை அதிகரித்து உற்பத்தியை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்தது. கடந்து வந்தகாலங்களில் உணவு முத்திரைகளை வழங்கி மக்களுடைய வருமானத்தினை அதிகரிக்கக் கூடிய வகையில் அவர்களுடைய சேமிப்புக்களை உண்டுபண்ணி போசாக்கான உணவுகளை மக்களுக்கு வழங்கி நல்ல ஆரோக்கியமான சமூகத்தின் ஊடாக அபிவிருத்தியைக் கொண்டு வந்து வறுமையினைத் தணிப்பதற்கு ஏற்பாடு செய்தருந்தது. அதனைத் தொடர்ந்து மக்களுக்கான வருமானம், உற்பத்தி , சேமிப்பு போன்ற பலவேற விடயங்களை கருத்தில் கொண்டு ஜனசக்தித்திட்டத்தினைக் கொண்டுவந்தது.
அந்தக் காலப்பகுதியில் ஒவவொரு பிரதேசத்திலும் 15 ஆயிரம் கருத்திட்டங்களை உருவாக்கி அவற்றின் ஊடாக அபிவிருத்திக் கட்டுமானத்தினை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் சமுர்த்தித்திட்டம் என்ற இந்தத்திட்டத்தினை ஏற்படுத்தி அதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதனை நீஙகள் அறிவீர்கள். அநத வகையில் பல்வேறு கோணங்களில் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. நச்சு வட்டம் என்கின்ற விடத்தில் இருந்து ஒரு இடத்தில் அதன் இயக்கத்தினை நிறுத்தி அதற்கூடாக அப்பிரதேசத்திலிருக்கின்ற வறுமையினைக் குறைக்கின்ற வகையில் வருமானத்தினை அதிகரித்து, சேமிப்பு அதிகரித்து அதனனூடாக முதலீட்டினை அதிகரித்து உற்பத்திகளை அதிகரிக்க வேணடும் என்ற அடிப்படையில் வறுமையாக இருக்கின்ற மக்களுடைய வாழ்க்கைத்ததரத்தினை முன்னேற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டுவருகிறது.

அவ்வாறிருந்தும் இன்றும் எங்களுடைய பிரதேசத்தில் வறுமை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணம் அந்த வறுமைத் தவிர்ப்புச் சம்பந்தமாக நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சரியான முறையில் சென்றடையந்ததா என்பதனை மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் சமுர்த்தி சௌபாக்கியா என்ற அடிப்படையில் உற்பத்தித்துறையில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களுடைய உற்பத்தியினை அதிகரித்து, அதன் ஊடாக சேமிப்பு, வருமானத்தினை அதிகரிப்பதன் ஊடாக வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சௌபாக்கியா திட்டத்தின் அடிப்படையில், மாவட்ட ரீதியில் உள்ள பயனாளகள் தங்களது பொருள்களுக்கான சந்தைப்படுத்தல் வசதியினைப் பெறும்வகையில் வழிவகைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அதன் ஒரு ஏற்பாடாகவே மாவட்ட அடிப்படையிலான இக் கண்காட்சியாகும். அதே போல இந்த உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தப்பட்டது.

சமுர்த்திப் பயனாளிகள் தவிர்ந்த மரபு ரீதியான உணவுப் பொருள்களை உறுபத்தி செய்வதன் ஊடாக பிரதேசத்தின் மக்களுடைய போசாக்கினை அதிகரிக்கும் வகையில் பட்டிப்படைய பிரதேச அன்னையர் முன்னணியினரும், பிரதேச சுற்றுலாத்துறையை முன்னேற்றுகின்ற வகையில் செயற்படும் உள்வாங்கப்பட்ட திறன் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சுப்ரீம் செப் குழுவினரையும் அழைத்திருக்கிறோம். சுற்றுலாத்துறையனை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் ஊடாக கல்லடிபபாலத்தில் அமைக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருந்த இறங்குதுறையில் இருந்து படகுச் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

கலலடிப்பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு அடையாளம், இங்கு வருகின்ற உள்ளுர் வெளிநாட்டுச் சுற்றுலாப்பிரயாணிகளுக்கான உணவுப் பொருள்களை, களியாட்டங்களை ஏற்படுத்தவதற்கு இதுவரையில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் ஒரு நாளுடன் திரும்பிச் செல்கின்ற நிலையினைப் பார்க்கின்றோம். எங்களுடைய மாவட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்தியில் வருமானம் அதிகரிக்கின்ற துறையாக சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எங்களுக்கிருககின்றது. அந்த அடிப்படையில் கல்லடிப்பாலத்தை எதிர்காலததில் வறுமை தணிக்கின்ற செயற்திட்டங்களாக இருந்தாலும் சரி, வருமானம் ஏற்படுத்துகின்ற திட்டங்களாக இருந்தாலும் சரி, அபிவிருததிய்கான செயன்முiயாக இருந்தாலும் சரி , இதனை ஒரு சந்தைப்படுத்தும் இடமாக இதனை மாற்ற வேண்டும். இந்தப்பிரதேசம் தொடர் தேர்ச்சியான உயிரோட்டமுள்ள பிரதேசமாக இருக்கின்ற பொழுது மக்களுடைய வருமானம் அதிகரிக்கும் என திடமாக நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

இக் கண்காட்சியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சமுர்த்தித்திட்டத்தின் ஊடாக வாழ்வாதார அபிவிருத்தி தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பயனாளிகளின் பாரம்பரிய, இயற்கை, கைப்பணி, புடவை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.