சிறிசேன கடும் எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு அமைச்சு பதவிகள் எதனையும் வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கட்சியின் மத்திய குழு ஏற்றுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன

 

ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள  நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.