களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற் கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நடவடிக்கை மேற் கொள்ப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி, கல்லாறு, கோட்டைக்கல்லாறு , செட்டிபாளையம், களுதாவளை, குறுமண்வெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்கள், சில்லறைக்கடைகள், வெதுப்பகங்கள் , சிற்றுண்டிச் சாலைகள் போன்ற பல இடங்களிலையே குறித்த சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுமார் ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட குறித்த இச் சோதனை நடவடிக்கையின் போது கலாவதியான உணவுகளை காட்சி படுத்த்தி வைத்திருந்தமை, நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தமை, முரணான சுட்டுத்துண்டுகள் ஒட்டப்பட்ட உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவை தொடர்பில் மேலும் பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்களும் அழிக்கப்பட்டது……பழுகாமம் நிருபர்