ஏதோவொரு வகையில் கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க கொண்டு இருக்கின்றது. என போரதீவுப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிசியின் பிரதேச சபை உறுப்பினர் சி.சிவனேசன்(வெள்ளையன்); தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்.
உண்மையில் தமிழ் மக்களுக்கு ரணில்;விக்கிரமசிங்க ஏதாவது செய்ய நினைத்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏதாவது செய்திருக்கலாம். தமிழ் மக்களை எந்தளவுக்கு ஏமாற்ற முடியுமோ அந்தளவுக்கு ஏமாற்றிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார் அவர்உ ருப்படியான காரியம் எதனையும் செய்து முடிக்கவில்லை. எங்களை பொறுத்தளவில் மஹிந்தராஜபக்ச செய்த அபிவிருத்தி விடயங்களைக் கூட விடயங்களையாவது அவர் செய்துமுடிக்கவில்லை.
தமிழர்களுக்கு நான் நிறைய விடயங்களை மேற்கொள்வதற்கு தயராக இருந்த போதும் அதனை தடுத்தவர் ரணில்விக்கிரமசிங்க என தற்போதைய ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு கூறுகின்ற வேளையில் அதனை நன்கு அறிந்து கொண்டு கூட்டமைப்பு இன்று ஜக்கியதேசிய கட்சி ரணில்விக்கிரமசிங்கவுக்கு ஆதரவினை கொடுத்துள்ளனர் என்றால் ஏதோ ஒன்று நடந்துள்ளது, என்றுதான் நாங்கள் கருத வேண்டும். இவ்வாறாக ரணிலை ஆதரிப்பதால் பலதரப்பட்ட பதகமான விடயங்கள் உள்ளது என தெரிந்து கொண்டும் ஏன் ரணில்விக்கரமிசிங்காவை ஆதரித்தனர் இதனால்தான் நாங்கள் கூறவேண்டியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் ஏதொவொரு விடயத்தில் மாட்யுள்ளது அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க கொண்டு இருக்கின்றது.
இந்த நாட்டில் பொரும்பான்மை இனத்தினை சேர்ந்த கட்சிதான் ஒன்றுதான் ஆட்சி அமைக்க முடியும். உண்மையாக தமிழ் மக்களுக்குரிய தீர்வினைத்தரக் கூடிய வல்லமை மஹிந்தராஜபக்சவிடம் தான் இருக்கின்றது. அவரால் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை தரமுடியும் அவரிடம்தான் அந்த தைரியம் உள்ளது அவர் கூறுவதையே இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் இதுதான் தற்போதைய அரசியல் நிலையென என அவர் இதன்போது அவர் தெரிவித்தார்……..பழுகாமம் நிருபர்