மட்டக்களப்பில் முன்னாள் போராளியின் மனைவி பிள்ளைகள் உண்ணாவிரதத்தில்

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி உண்ணாவிரதப் போராட்டம்!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கணவருக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவ்வாறு தொடர்பு இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுக்குமாறும் கேட்டுள்ளார். தங்களது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த 18 நாட்களாக உணவுக்கு வழியின்றி கஷ்டத்தில் உள்ளதாகவும் தனது கணவரை அரசாங்கம் விடுதலை செய்யாவிட்டால் தான் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

நிலாந்தன்