ஐக்கியதேசியகட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை .ஐனாதிபதியுடன் உறவைப்பேணுவேன் .

இப்போதல்ல எப்போதும் ஐ.தே.கட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல்அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை சில ஊடகங்களும் பொய்யாக செய்தி வெளியிட்டுள்ளன . காலப்போக்கில் இத்தகைய வேலைகளை செய்யும் ஊடகங்களை மக்கள் பொய் ஊடகங்களாக நிராகரிக்கும் நிலை ஏற்படும் .
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எனது கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல் நோக்கில் தான் பிரதி அமைச்சைப் பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.நில வளம் சூறையாடப்படுகிறது. இல்லை என்று யாராவது பகிரங்கமாக சொல்லட்டும்.
அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு.தற்போதைய சூழலில் நான் எடுத்து பதவியை   தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி உடன் தொடர்ந்து பேசுகிறேன் . அதில் எதுவித மாற்றமும் இல்லை. அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது . அத்தகைய வேலையை கனவிலும் நினைத்து பார்க்கமாட்டேன் .
இன்னொன்றையும் கூறிக்கொள்கிறேன் ‘ அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்ல’. அதை விடுத்து உங்கள் கற்பனைக்கு வந்ததை எழுத வேண்டாம் . இரண்டு பக்கமும் தீரவிசாரித்து உண்மைத்தன்மையை அறிந்துசெய்தியை வெளியிடுங்கள்  அதுதான் ஊடகத் தர்மம் எனவும் தெரிவித்துள்ளார்.