அவமானத்துக்கு உட்படாமல் தானாக பதவி விலகிய மஹிந்த – மனோ

அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியமையால் போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக முடியாமல் போனது.

தவறான பாதையில் தன்னை வழிநடத்திய முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.