சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும்  மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் அது, மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் தென்படுவதாகவும் எனவே, மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.