கருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

க. விஜயரெத்தினம்)
வவுணதீவு படுகொலையை கண்டித்து கருணாஅம்மான் கட்சியினரால் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்ற பொலிசாரின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் நேற்று சனிக்கிழமை(15)காலை 10.30 மணியளவில் பாரியதொரு கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரும்,கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான துரையப்பா-நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் வ.கமலதாஸ்,ஊடகப்பேச்சாளர் சூ.வசந்தராசா,மற்றும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது ஆட்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாதாதையை தாங்கியவாறு கோசம் எழுப்பினார்கள்.”வவுணதீவில் கொலை யாருக்கு இலாபம்…? ,”சட்டத்தின் ஆட்சி நிலைக்க வேண்டும்” ,”சௌஜன்ய உறவுகள் வளர வேண்டும்” ,”வேதனைகள் தருகின்றது பொலிசாரின் படுகொலை” ,”வவுணதீவு படுகொலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாய் இருப்தேன்…? ” ,”அரசியல் ஆதாயம் தேட முன்னாள் புலிகளை பலியாக்க வேண்டாம்” ,”அரசே சட்டவிரோத சக்திகள் கால் பதிக்க விடாதே…!!!” ,”ஆறும் ரணங்கள் கீறவேண்டாம் ;அரசியல் இலாபம் தேடவேண்டாம்”  ,” புலி முகவர்களின் பொறிகளில் உங்கள் பிள்ளைகளை பறிகொடுக்காதீர்” ,”நடுநிலை ஆய்வாளர்கள் படுகொலையை விசாரிக்க வழிவகை செய்யனும்” , “உண்மைக் குற்றவாளியை உறுதியாக இனம் காண்பதற்கு உதவுங்கள் என ஆட்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.