ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள்
உருவாகி உள்ளதால் அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைப்பாளர்கள் இந்தத் தகவலை உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அமைச்சரவை ஒன்று பெயரிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் தரப்பை, அரசாங்கமாக தொடர்ந்து செயற்பட அனுமதிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.