கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

அதற்கமைவாக முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையும், இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கையானது ஜனவரி மாதம் 07 ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.