திருகோணமலை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

திருகோணமலை நகர சபையின் 2019ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை 2018.12.13 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 22 உறுப்பிர்கள் கொண்ட சபையில் 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முகமட் சனூன் பிரசன்னமாகி இருக்கவில்லை. காலை 9.30 மணிக்கு சபை தலைவர் நா. இராசநாயகம் தலைமையில் கூடியது.
தமிழர் சமூக ஜநாயக கட்சி உறுப்பினர் சின்னையா சிவகுமார் மாத்திரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்