ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில், சோளப் பயிர்செய்கையில்  ஏற்பட்டுள்ள படைப்புழுத் தாக்கத்தால், சுமார் ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளதாக, மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்முறை சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் சோளச் செய்கை பண்ணப்பட்ட போதிலும் அரைவாசியளவில் படைப்புழுத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான அறிவூட்டல் நிகழ்வுகள் விவசாய திணைக்கள அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.