பரீட்சை மத்திய நிலையத்துக்கருகில் கத்தியுடன் நின்ற இளைஞன் கைது

சாதாரணதர பரீட்சைகள் இன்று (12) நிறைவடைந்த நிலையில், திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை​யொன்றுக்கு அருகில் 18 வயது இ​ளைஞரொருவர் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த வேளையில், குறித்த இளைஞரை திஸ்ஸமஹாராம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் திஸ்ஸமஹாராம தெபரவெவ பி​ர​​​தேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவித்தனர்.

சாதாரணதர பரீட்சைகள் இன்று நிறைவடைவதன் காரணமாக, பரீட்சைகள் இடம்பெறும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென, தங்காலை தொகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதாலின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.