மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பிரதேசத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 64 கோழிகளை திருடடிய இரு இளைஞர்களை இன்று காலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கோழிப் பண்ணையில் இருந்த 64 கோழிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளது.
இது தொடர்பாக பண்ணை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் சி .சி. டிவி .கமராவின் உதவியுடன் கோழிகளை திருடிய 18, 20 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட கோழிகளையும் மீட்டனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.