மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களின் நியமனங்கள் அதிகாரமற்றதெனத் தெரிவிக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த மனு மீதான விசாரணைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16,17 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகைளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசகர ஆகியோரால் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.