கொக்கட்டிச்சோலையில் மாற்றுத்திறனாளிகள் கெரளவிப்பு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டல் மற்றும் உள்வாங்கல் சமத்துவத்தை உறுதிப்படுத்தல் அதற்காக பாடுபடுவோம், குரல்கொடுப்போம் பயணிக்கத் தயார் ஆனால் நாம் எல்லோரும் தயாரா? எனும் தொனிப்பொருளில் இன்று(11) செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பரிசில் வழங்கலும், மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்பும் நிகழ்வும் இடம்பெற்றன.

உதய ஒளி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர், கி.பாக்கியராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதய ஒளி அமைப்பின் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், தமது ஆற்றல்களை கடந்த காலங்களில் வெளிக்காட்டியிருந்தவர்களுக்கு பாராட்டுக்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் கடன்தொகை வழங்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகம் இடம்பெற்றன. நிகழ்வின் நிறைவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்விற்கான அனுசரணையை பிரதேச செயலகம், பிரதேசசபை, மனிதநேய காப்பகம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஏற்றம் அமைப்பு போன்றன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.