ஒன்றுபட்டால்தான் குறிக்கோளை அடைய முடியும் : புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் புள்ளநாயகம்

நான் கௌரவ அளுநரின் கூற்றுக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டே நான் இங்கு வருகை தந்திருக்கின்றேன். அவரது ஆலோசனைகளை அமுல்படுத்துவது தனியே என்னால் மாத்திரம் செய்ய முடியாத காரியமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் இந்த குறிக்கோளை நாங்கள் அடைய முடியும் என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தெரிவித்தார்
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த திருமதி ந.புள்ளநாயகம் அவர்கள்  திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் பட்டிருப்பு வலயக் கல்வி பணி;பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதன் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் தனது கடமைகளை பலத்த வரவேற்புக்கும்; மத்தியில் நேற்று பொறுப்பேற்று கொண்ட அவர்  உத்தியோகத்தர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
நான் இந்த வலயத்திற்கு வரும் போது  வலயத்தினுடைய வெளியீடுகளை என்னிடம் கௌரவ ஆளுநர் அவர்கள் கோடிட்டு காட்டியிருந்தார். இதில் உயர்வு காண வேண்டும் அதேபோல் மேம்மேலும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் கணித விஞ்ஞான துறையில் பல்கலைக் கழகத்திற்கு கூடுதலான மணவர்கள்  அனுமதி பெறுவதற்காக செயற்பட வேண்டும். மற்றும்  எமது பிரதேசத்தில் தேசியபாடசாலைக்கு ஒத்ததான ஒரு சிமாட் பாடசாலையை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற் கொள்ள வேண்டும் எனவும் அதனை பார்வையிடுவதற்கு அவர் வருகை தருவதாக என்னிடம் கூறியுள்ளார்.
அது மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியதொரு வலையமாக இருப்பதால் இவ் வலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் முன்னேற்றகரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அந்த வகையில் கௌரவ அளுநரின் கூற்றுக்களையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொண்டே நான் இங்கு வருகை தந்திருக்கின்றேன். அவரது ஆலோசனைகளை அமுல்படுத்துவது தனியே என்னால் மாத்திரம் செய்ய முடியாத காரியமாகும் எனவே இங்கிருக்கின்ற அனைவரும் ஒன்று சேர்ந்துதான் இந்த காரியத்தினை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எமது குறிக்கோளினை எய்யமுடியும்
நாங்கள் உத்தியோத்திற்காக ஒன்றிணைவது மாத்திரமல்ல நாங்களும் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற வகையில் எமது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்காக நாங்கள் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும். நீங்கள் அனைவரும் இதற்காக செயற்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். எமது மாணவர்களின் கல்வி வளரச்சிக்காக உழைத்து கிழக்கு மாகாணத்திலே ஒரு சிறந்த கல்வி வலயமாக இந்த கல்வி வலயத்தினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று படவேண்டும் என இத்தால் கேட்டுக் கொள்கின்றேன்…பழுகாமம் நிருபர்