மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய வாகனங்கள்

மாநகரின் திண்மக்கழிவகற்றல் சேவையினை மேம்படுத்தும் நோக்கிலும், துரித கழிவகற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுத்தமான நகரை உருவாக்கும் நோக்கிலுமாக மட்டக்களப்பு மாநகர சபையால் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கொம்பக்டர் வாகனங்களையும், இழுவைப் பெட்டியுடன் கூடிய நான்கு உளவு இயந்திரங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரத்திற்குள் வதியும் மக்களின் வரப்பணத்தின் ஊடாக, மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்களுக்கான சுகாதார சேவையை மேலும் வினைத் திறனாகவும், விளைதிறனாகவும் மேற்கொள்ள ஏதுவாக கிட்த்தட்ட 22 மில்லியன் ரூபாய்கள் செலவில் இவ்வாகனங்களை தாம் கொள்வனவு செய்துள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்ட குறித்த வாகனங்களை மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைகள் குழு தலைவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.